இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் பிச்சைக்காரர்களாகுவார்கள் – இராதாகிருஸ்ணன்

0
6

இலங்கையில் இருந்து திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா நிச்சயம் குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கைக்கு அவர்களை அனுப்பினால் பெருந்தோட்டங்களில் குடியமர்த்த வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவர்களை அங்கு குடியமர்த்தினால் அவர்கள் பிச்சைகாரர்களாகுவார்கள். ஆகவே இந்தியாவே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது,நாட்டின் கல்வித் துறையில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விசேட கவனம் செலுத்தியுள்ளதை வரவேற்கிறோம்.நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் கல்வி அமைச்சர்களான பந்துல குணவர்தன,அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முயற்சிகளை முன்னெடுத்தார்கள்.இருப்பினும் பல்வேறு காரணிகளால் அந்த முயற்சி வெற்றிப்பெற்றவில்லை.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 2007 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக பதவி வகித்த போது மலையகத்துக்கு 3000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.எதிர்காலத்தில் 2900 ஆசிரியர் நியமனங்களை மலையகத்துக்கு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிகாலத்தில் பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன.இதனை தொடர்ந்து பெருந்தோட்ட பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றது.1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து பெருந்தோட்ட பகுதிகளின் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக பதவி வகித்த போது பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தினார்.கல்வியியற் கல்லூரிகளை உருவாக்கி,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.ஆகவே இலங்கையின் கல்வித்துறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பு இன்றியமையாதது.மலையக பகுதியில் 14500 ஆசிரியர்கள் சேவையில் உள்ளார்கள்.உதவி ஆசிரியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரன தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி,யாழ்.இந்துக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரி முன்னிலையில் உள்ளன.அதே போல் மலையகத்தில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி முன்னிலையில் உள்ளது.மலையகத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளார்கள்.உயர்தர கல்வி கற்பதற்கான தகுதி உயர்வடைந்துள்ளது.ஆகவே கல்வித்துறையில் முன்னேற்றம் உள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் 25 பாடசாலைகளை விஞ்ஞான பாடசாலைகளாக மாற்றும் திட்டம் செயற்படுத்தப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ‘இந்த 25 விஞ்ஞான பாடசாலைகள் தொடர்பில் ராதாகிருஸ்ணணிடம் கேளுங்கள் ‘ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.தெரிவு செய்யப்பட்ட 25 பாடசாலைகளுக்கு உரிய வளங்கள் வழங்கப்பட்டன.ஆனால் தகுதியான ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை.அந்த தேவையை கல்வி அமைச்சு நிறைவேற்றியிருக்க வேண்டும்.இதனடிப்படையில் பசறை தமிழ் மகா வித்தியாலயம்,பண்டாரவெல தமிழ் மகா வித்தியாலயம்,சரஸ்வதி சி.சி பதுளை,தமிழ் பெண்கள் பாடசாலை பதுளை,டி.எம்.வி.அப்புத்தளை,விபுலானந்தா -மொனராகலை, கனகநாயகம் -பலாங்கொட,சென்ஜோன்ஸ் இரத்தினபுரி,கதிரேசன் -தெரனியாகல, சென்மேரிஸ்-யட்டியாந்தொட்ட, இரத்தினபுரி -டி.எம்.வி,ஸ்ரீ கிருஸ்ணா-காவத்தை,டி.எம்.வி.-ராகலை,தலாவகலை டி.எம்.வி.நுவரெயிலா, கம்பளை இந்து கல்லூரி, கெட பொல டி.எம்.வி.ஹைலன்ட்ஸ் கல்லூரி,டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம்,மில்லகந்த புளத்சிங்கள ஆகிய உள்ளிட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன.இந்த பாடசாலைகளில் உயர்தரம் கற்பிப்பதற்கு துறைசார்ந்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை.இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆசிரியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்த போது ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நான் மாகாண கல்வி அமைச்சராக பதவி வகித்த போது 25 ஆசியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டன.ஆகவே இவ்விடயங்களையும் ஆட்சியாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தினால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்ற தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும் என இந்தியா – மெட்ராஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதனை நாங்கள் வரவேற்கிறோம்.இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியா நிச்சயம் குடியுரிமை வழங்க வேண்டும். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் பெருந்தோட்டங்களில் அவர்களை குடியமர்த்த வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவர்களை அங்கு குடியமர்த்தினால் அவர்கள் பிச்சைகாரர்களாகுவார்கள். ஆகவே இந்தியாவே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here