Online கடன் பெற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

0
10

வங்குரோத்து நாட்டில் பல்வேறு ஏமாற்று வெளிநாட்டு தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டும் இலங்கைக்கு வந்தும் Online கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி அதிக வட்டி அறவிட்டு வருகின்றனர்.இதில் பிணையாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.கடனை ஓரிரு நாட்களில் கட்டவில்லை என்றால் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மிரட்டி அவமானப்படுத்தும் செயல் நடந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.

இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது,இதில் சட்ட சிக்கல் இருப்பதால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.இந்த விவகாரம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ள தரப்பினரோடு சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இந்த பெரும் கடன் வழங்குநர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.300 சதவீத வட்டி அறவிட்டு வருகின்றனர்.கடனை செலுத்துவதில் ஒரு நாள் தாமதித்தால், தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும்,
குடும்ப புகைப்படங்களை ஆபாசமான படங்களுடன் எடிட் செய்து சமூக ஊடகங்கள் மூலம் அவமானப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிக்கொணர்ந்தார்.

புதிய சட்டங்களை கொண்டு வரும்போது, ​​இதுபோன்ற ஏமாற்று மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.தவறான விசா நிபந்தனைகளில் அவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால்,
அவர்கள் நாட்டிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்,
இவ்வாறான மோசடியான தொழில்களில் கடன் பெற்றவர்கள் குறித்த கடனை செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here