களனி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

0
6

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 4ஆம் திகதி மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here