விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்!

0
4

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பால் மா 10 ரூபாவாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும், 155 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன் 10 ரூபாவினாலும், 425 கிராம் உள்நாட்டு டின்மீன் 20 ரூபாவினாலும், உள்ளூர் உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், கொண்டைக்கடலை 5 ரூபாவினாலும் விலை ஒரு கிலோ சிவப்பு அரிசி 8 ரூபாவினாலும், வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை 35 ரூபாவிற்கும், ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெங்காயம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here