நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் தென்னைச் செய்கையில் வெள்ளை ஈ சேதம் காணப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈக்களின் சேதம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையானது, நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை ஈ நோய் உள்ளதா என்பதை ஆராயுமாறு பயிர்ச் செய்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.