இலங்கை வங்கியின் புதிய தலைவர் நியமனம்!

0
3

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி நேற்று கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்தது. இலங்கை வங்கியின் புதிய தலைவராகக் காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராகச் செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நேற்று முதல் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் இன்று முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்கவின் சகோதரரான காவன் ரத்நாயக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here