வெளிமட டயரபா தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் அடாவடி செயல்பாடுகளுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர் .குறித்த இடத்திற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வருகை தந்திருந்தார் இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்தவர்

வெளிமட டயரபா தோட்ட அதிகாரி அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை உபயோகித்துள்ளதோடு கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார். காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொள்ளும் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களின் போது களத்தில் துணை இருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் தொழிற்சங்கவாதி என்ற ரீதியிலும் என்னுடைய கடமையும் பொறுப்பு ஆகும் நாடாளுமன்ற அமர்வைத் துறந்து இன்றைய தினம் களத்திற்கு விஜயம் செய்து உடனடியாக குறித்த முகாமைத்துவ அதிகாரியை வேலையில் இருந்து நிறுத்தியதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் இருந்த பிரச்சனையையும் சுமுகமாக தீர்த்து வைத்திருந்தேன்.

எதிர்வரும் திங்கட்கிழமை நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை வழங்குவதாக தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

முறைகேடாக நடந்த தோட்ட அதிகாரிக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கையளித்துள்ளதோடு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here