இடியுடன் கூடிய மழை பெய்யும்!

0
6

தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்ப் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென், ஊவா, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here