அக்போவின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

0
6

காட்டு யானை அக்போ மீண்டும் தங்கள் கிராமங்களில் சுற்றித் திரிவதாகவும் இதனால் குறித்த அக்போவின் உயிருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் திரப்பனை மக்கள் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானை வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்களின் சிகிச்சையின் பின்னர் குணமானது.

காயங்களில் இருந்து மீண்டு வந்த யானை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்து கிராம மக்களின் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கிராம மக்கள் சம்பவம் தொடர்பில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு தகவல் கொடுத்ததுடன்இ அவர் கடந்த திங்கட்கிழமை (4) கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

சுமார் நான்கு மாதங்களாக அக்போ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும்இ குணமடைந்த பின்னர் தனது வழமையான வாழ்க்கை முறையை ஆரம்பித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவர்களின் பரிந்துரையின்படிஇ அக்போ யானைக்கு சிகிச்சை காலத்தில் ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிலோ காய்கறிகள்இ பழங்கள் மற்றும் புல் வழங்கப்பட்டது. தற்போது திரப்பனை பகுதியில் அதே அளவு பயிர்களை யானை தேடி தின்று வருகிறது.

பல கிராமங்களில் சுற்றித்திரியும் அக்போ உணவு தேடி பல வீடுகளை உடைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

நடக்க முடியாத நிலையில் இருந்த அக்போ தற்போது கிராமங்களில் உணவு தேடி இரவு 10 கிலோமீட்டர் சுற்றி வருவதாகவும்இ இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

தினசரி கிராமங்களுக்குள் நுழைவதால்இ யானையை விரட்ட வனவிலங்கு அதிகாரிகள் தினமும் 200 முதல் 300 வெடிகளை பயன்படுத்த வேண்டியுள்ளதுடன்இ வனவிலங்கு அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவேஇ குறித்த யானையை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி விவசாய பயிர்களை பாதுகாக்கவும்இ மனித உயிர்கள் பாதிக்கப்படும் முன் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here