நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

0
10

எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதி அளவில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டால் நாடாளுமன்றின் செயற்குழுக்கள் அனைத்தும் இரத்தாகும் என்பதுடன் நாடாளுமன்றம் மீள ஜனாதிபதியினால் கூட்டப்பட்டதன் பின்னர் இந்த செயற்குழுக்கள் மீண்டும் புதிதாக செயற்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றை அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் முடியும். ஜனாதிபதி நாடாளுமன்ற ஒத்திவைத்து மீளவும் நாடாளுமன்றம் அமர்வுகள் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியும்.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் ஆகும் போது ஜனாதிபதி அக்கிராசன உரையை மேற்கொண்டு சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளை ஆரம்பித்து வைப்பார்.

தற்பொழுது கோப் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here