திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றக் கூட்டம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழு கடந்த டிசம்பர் 12ஆம் திகதியன்று தீர்மானித்தது. 9ம் திகதி காலை 9:30 முதல் 10:30 மணி வரை வாய்வழி கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை நிறுவுவதற்கான திருத்த சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here