வரவு செலவு திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

0
10

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நடுநிலை வகித்தார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் (21) ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நவம்பர் 22 ஆம் திகதி ஆம் திகதி முதல் இன்றுவரை குழுநிலை விவாதம் நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here