ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் கிராமிய பாடல் என்ற பிரிவின் கீழ் பங்கு பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பாடசாலைக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசீல்களும் வழங்கி வைத்ததோடு ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது

அங்கு கருத்துரைத்த வடிவேல் சுரேஷ்

மலையகத்தின் மறுமலர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் பெற்றோர் படும் துயரை நன்குணர்ந்து கல்வியிலும் ஏனைய செயற்பாடுகளிலும் முன்னேற்றம் கண்டு மலையகத்திற்கும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்
இன்னும் பல சாதனையாளர்கள் இப்பாடசாலையில் இருந்து உருப்பெற வேண்டும் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும் ஏன் அரசியலிலும் கூட. நீங்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறும்போது மலையகத்திலும் புதிய மலர்ச்சி உருவாகும் நாளைய மலையகம் உங்கள் கைகளிலேயே அழகாக போகிறது ..

மலையக பாடசாலைகள் வளர்ச்சி பாதையினை நோக்கி பயணிக்க என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வேன் என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here