நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

0
11

நாடு முழுவதும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here