இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு!

0
4

வளைகுடா நாடுகளுக்குக் கடத்தப்படுவதற்காகப் பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கங்கூனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்குத் திடீர் சோதனை நடத்தினர். அனாதை இல்லத்தில் சோதனை நடத்தியபோது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமியர் மீட்கப்பட்டனர். இந்த அனாதை இல்லம் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக அடைக்கலம் தருவதாகக் கூறிய சிறுமிகளைச் சேர்த்துள்ளது.

20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here