பண்டிகை காலத்தில் சந்தையில் மோசடி கும்பலொன்று செயற்படுவதாக
பண்டிகை காலத்தை குறி வைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை விலையை உயர்த்தி இருப்பதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படிஇ 15 மில்லியன் முட்டைகளுடனான கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here