கிரிபத்கொடையில் கால சந்தி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18.12.2023) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.