நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக சமிந்த விஜேசிறி தீர்மானம் !

0
7

நாட்டு மக்களின் நெருக்கடியை கவனத்தில் கொண்டும் மனசாட்சிக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

09 ஆவது நாடாளுமன்றத்தில் 8 மாதங்கள் அங்கம் வகித்துள்ளேன். அந்த வகையில் என்னுடைய மக்களுக்கான சேவையை முடிந்த அளவு செய்துள்ளேன் என நினைக்கின்றேன்.
நாட்டு மக்கள் பாரிய அளவில் நெருக்கடியில் உள்ளனர். இத்தகைய பின்னணியில் நாட்டு மக்கள் 225 பேரையும் பதவி விலகுமாறு கோருகி;ன்றனi. நெருக்கடி நிலையில் நாட்டு மக்கள் எம்மை மாத்திரமல்லாது எம்முடைய பிள்ளைகளையும் சபிக்கின்றனர்.
இந்நிலையில் அரசியலில் தொடர்ந்தும் பயணிப்பதா என்ற சிந்தனை என்னுள் எழுந்தது. ஆகவே 09 ஆவது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் சட்டம் நீதி ஒழுங்கு காணப்படினும். அவை உரியவாறு இடம்பெறுவதில்லை. இந்த நாடாளுமன்றத்தின் ஒழுங்கு பின்பற்றப்படுவதில்லை. இவை பாரதூர பிரச்சினையாகும்.
225 பேரினுள் ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர்கள் இந்த சபையில் அங்கம் வகிக்கின்றனர். இந்த நாடாளுமன்றத்தில் மக்கள் ஆணை இல்லை. அதேபோல் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தினுள்
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் விரும்பும் அரசியல் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியினுள் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக நான் பதவி விலகவில்லை மாறாக தனிப்பட்ட கொள்கையை நோக்காக கொண்டே நான் பதவியிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளேன்.
நாட்டின் பொறுப்பை ஏற்க வல்ல தலைவர் உள்ளார் அவர் ஆடச்pயமைக்கும் போது எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் அரசியலில் தொடர தயாராகவுள்ளேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here