தணிக்கைப் பிரிவின் எதிர்ப்பு !

0
15

பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோப்) உள்ளக விசாரணைகள் நடத்தப்படும் விதம், அதன் சில செயற்பாடுகள் உட்பட, தணிக்கைப் பிரிவின் அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே கோப் குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நிலையியற் கட்டளைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ள போதிலும், அரசியல் இலக்குகளை அடைவதற்காகவே ஏனைய விடயங்களை இந்தக் குழு ஆராய்வதாக கணக்காய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோப் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் சில விடயங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த காலங்களிலும் இவ்வாறான பல விசாரணைகள் நடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here