குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் தேசிய வேலைத்திட்ட முகாமையாளர் வைத்தியர் நேதாஞ்சலி மபிடிகம இலங்கையில் சுமார் 10 சதவீத ஆண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உடல் ,பாலியல் ,மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் இவற்றுல் அடங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ,குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் ‘மிதுரு பியச’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.

இதனையடுத்து , குடும்ப வன்முறை வழக்குகளைப் புகாரளிக்க (070 2 611 111 )என்ற எண்ணைப் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here