இலங்கைக்கு எதிரான 2வது சர்வதேச T20!

0
3

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ்  அணி 8 விக்கெட்களால்  வெற்றி பெற்றுள்ளது

சிலெட்டில் நடைபெற்ற  போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட பங்களாதேஷ் அணி தீர்மானித்தது.

இதற்கமைய, துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

குசல் மென்டிஸ் 36 ஓட்டங்களைப் பெற்றதுடன், கமிந்து மென்டிஸ் 37 ஓட்டங்களை பெற்றார்.

அணித் தலைவர் சரித் அசலங்க 28 ஓட்டங்களை பெற்றதுடன், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சௌமிய சர்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

சௌமிய சர்கார் 14 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அவரை ஆட்டமிழக்க செய்வதற்கான வாய்ப்பு நழுவவிடப்பட்டது.

அவர் ஆட்டமிழந்த வீரராக நடுவர் தீர்மானித்த போதிலும் மூன்றாம் நடுவர் அவர் ஆட்டமிழக்காத வீரர் என அறிவித்தார்.

இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை அணி வீரர்கள் நடுவருடன் கலந்துரையாடுவதையும் காண முடிந்தது.

சர்கார் 26 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இரண்டு விக்கெட்களையும் மதீஷ பத்திரன வீழ்த்தினார்.

மூன்றாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹுசைன் ஷேன்ட்டோ மற்றும் டவுஹித் ரிதொய் ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தின் மூலம் 87 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here