இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

0
6

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 654,977.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 656,288 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,150 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 185,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,260 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 162,050 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here