பெரிய வெங்காயத்தின் விலை 1000 ரூபாய்?

0
5

அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் வெங்காயம் கிலோவொன்றின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கக் கூடும் எனப் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பெரிய வெங்காய விலையைச் சீராகப் பேண வேண்டுமாயின் இந்தியாவில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here