அரிசி இறக்குமதி செய்ய தேவையில்லை!

0
24

நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல கோடி ரூபா செலவில் புல்னேவ அரிசி பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டதன் பின்னர், அதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து அரிசி பதப்படுத்தும் இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினையின் பின்னணியில் இவ்வாறான பெறுமதியான வளம் அழிவின் வாயில் செல்வதைத் தடுப்பதற்கு பொறுப்பான அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ‘அத தெரண’ நினைவூட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here