நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படும்.

புதிய கூட்டத் தொடரின் பின்னர், ஜனாதிபதியினால் அதற்கான உறுப்பினர் நியமனம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here