ஜனாதிபதியால் தற்போது நிகழ்த்தப்படும் பட்ஜெட் உரையின் இதுவரையான அறிவிப்புகள் இதோ…..

0
17

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று(13) நண்பகல் 12.00 மணி முதல் வாசிக்கப்படுகிறது { குறிப்பிட்ட உரையில் தெரிவிக்கபட்ட விடயங்கள் ….

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கட்டுகஸ்தோட்டை வரை அமைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது

மோட்டார் போக்குவரத்து துறை 2024ல் டிஜிட்டல் மயமாக்கப்படும்

2025 ஆம் ஆண்டிலிருந்து, மாகாண சபை வருமானத்தில் சுமார் ஐம்பது வீதத்தை தொடர் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் மேலதிக வருமானத்தை மூலதனச் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குராங்கொட சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக 2 பில்லியன் ஒதுக்கப்படும்.

வரவு – செலவுத் திட்ட நோக்கங்களுக்காக பணத்தை செலவழிப்பதற்கும் பாராளுமன்றம் பொறுப்பு. மாகாண சபைகளில் இருந்து பெறப்படும் வருமானம் மாகாணத்தின் குறைபாடுகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

 

புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதான ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வர முயற்சி

இலங்கையில் கிரிக்கெட் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாகாணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்னுரிமை.

கண்டி பௌத்த நாகரிக அருங்காட்சியகத்திற்கு அடுத்த வருடத்துக்கு இருநூறு மில்லியன் பயன்படுத்தப்படும்.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் 1.5 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் 1.5 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும்.

காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

கீழ் மல்வத்து ஓயா திட்டத்திற்கு மேலும் 2500 மில்லியன் ஒதுக்கப்படுகிறது

மகாவிகாரையின் வரலாறு மற்றும் பாத்திரங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மகா விகாரை பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிகிறார். இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்காக 400 மில்லியன் ஒதுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கப்படும்

கொழும்புத் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அந்த தோட்டங்களில் வீட்டுத் தொகுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. கட்டுமான நிறுவனங்களுக்கு காணிகளை வழங்கும் மக்களுக்கு அந்த கட்டுமான வாளாகத்தில் வசிக்க இடம் வழங்கப்பட வேண்டும்.

பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படுகிறது.

பால் பண்ணை உற்பத்தியை லாபகரமான நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக எதிர் நிதிக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தினசரி பால் உற்பத்தியை நாளொன்றுக்கு இருபது மில்லியன் லிட்டராக அதிகரிப்பதே எங்களின் நோக்கம்.

நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக இருநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

பயிரிடப்படாத நெல் நிலத்தில் மற்ற பயிர்களை வளர்ப்பதற்கான முன்மொழிவுகள்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பாதுகாப்பு காப்பீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.

ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படும். வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு, மருந்து கொள்முதல் செயல்முறைக்கு தனி நிறுவனம் நிறுவப்படும்.

புதிய யுகத்திற்கு ஏற்றவாறு அரச பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த வேலைத்திட்டம் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். இதற்காக அடுத்த வருடத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

பொது நிறுவனங்களால் ஏற்படும் நஷ்டம் முழுவதுமாக பொதுமக்களையே சுமத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய வளங்கள் என்ற போர்வையில் மக்கள் மீது சுமையை சுமத்துவதில் தொடர்ந்து ஈடுபடும் அரசியல் குழுக்களை விமர்சித்த அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வலியுறுத்தினார்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத்துறைக்கு ஒதுக்குவது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல, பரந்த நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறை போன்ற வெளிநாட்டுச் செலாவணி ஈட்டும் நோக்கங்களுக்காக வரலாற்று கட்டிடங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காலி தபால் அலுவலகம் போன்ற மற்ற வரலாற்று கட்டிடங்களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி எச்சரித்தார்

சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தை இலங்கையில் ஆரம்பிக்க திட்டம். அதற்கான இந்தியா முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானம் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படாவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்நோக்கும்

உயர் கல்வி மாணவர்களுக்கான பல்கலைக்கழகக் கல்விக்காக 4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள்

தொடர்ச்சியான விரிவான கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன

இயற்கை பேரிடர்களால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க 2 பில்லியன் ஒதுக்கீடு

தற்போது எங்களிடம் காலாவதியான கல்வி முறை உள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம்.

கிராம வீதிகளை புனரமைக்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள கிராமப்புற வீதிகள் , மற்றும் ழுதடைந்த கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும். நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த முறைப்படி இந்நாட்டு மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர்

அரச ஊழியர்களின் சம்பளத்தை நினைத்தைப்படி அதிகரிக்க முடியாது. அரச ஆதாயத்தை அதிகரிக்காமல் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வருமானத்தை அதிகரிக்காது சம்பளத்தை அதிகரிக்கவேண்டுமாயின், பணம் அச்சடிக்கவேண்டும். இல்லையேல் வெளிநாடுகளில் கடன்வாங்க வேண்டும். இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் , இது தேர்தல் பட்ஜெட் அல்ல, எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் பட்ஜெட் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை கொடுப்பனவு 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்

06 மாதங்களுக்கு ஒருமுறை, அஸ்வெசும பயனாளர்கள் மதிப்பாய்வு செய்யப்படுவர்.

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகையை 7,500 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு அனர்த்த கடன் வழக்கம் போல் வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும்.

அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாத சம்பளத்துடனேயே வழங்கப்படும்.

இதற்கமைய அந்த கொடுப்பனவு 17,800 ஆக உயர்த்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here