எரிபொருள் விலையில் மாற்றம்!

0
11

நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரகப் பெட்ரோலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும். மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 257 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here