கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் கீரி சம்பாவினை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி இன்று (05) முதல் இரவு பகலாகச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களிடமிருந்து வசூலித்த அபராத தொகை 27 கோடியே 84 லட்சம் ரூபாய்களாகும். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க, “சந்தையில் கீரி சம்பா 320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 01 கிலோ கீரி சம்பாவை 260 ரூபாய்க்கு மேல் விற்று பிடிபட்டால் சாதாரண வியாபாரிக்கு 1 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்கள் என்றால் 05 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறிய இலாபத்திற்காகச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.” விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால், 1977 என்ற எண்ணுக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
புத்தாண்டில் அரிசி சுற்றிவளைப்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தலின்படி, கீரி சம்பா ரூ.260, சம்பா ரூ.230, நாட்டரிசி ரூ.220, சிவப்பரிசி ரூ.210 – என அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here