நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருந்த நிலையில் அதன் பாதியை ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1.3 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் என்பது மாதத்திற்கு ரூ.13 பில்லியன் புதிய அதிகரிப்பு. மறுபுறம், ஓய்வூதியம் பெறும் 730,000 பேருக்கு 2,500 ரூபா அதிகரிப்பு வழங்கப்படுகிறது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் பொதுமக்களுக்கு இன்னும் சலுகைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஏற்கனவே அதிகபட்ச நிவாரணம் கொடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.