பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காலி கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் உளவியல் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். தரம் ஆறு முதல் அதற்கு மேற்பட்ட தரங்களில் கற்கும் மாணவர்கள் மத்தியில் இவ்வாறு மோதல்கள் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் காண்பிக்கப்படும் வன்முறைகள், சண்டைகள், துப்பாக்கிச்சூடுகள், பழிவாங்குதல்கள் உள்ளிட்ட காட்சிகளைப் பார்வையிடுதல் மற்றும் வீடியோ கேம்கள் மூலமாக மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.