2 மணிநேரம் மட்டுமே அனுமதி! – தமிழக அரசு

0
23

உலகம் முழுவதும் தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் சூழலில் தமிழக அரசு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு தான், பட்டாசுகளை வெடித்து அன்றைய தின கொண்டாட்டத்தை பலரும் தொடங்குவார்கள்.

இதனால் காற்று மாசுபாடும் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் காலை 6 மணிமுதல் 7 மணிவரையும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு பொலிஸ்
நிலையத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here