அண்மைய சந்திப்பில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு இறப்பு விகிதத்தை அதிகரிக்கப் பங்களிக்குமாறு வடகொரியப் பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரியத் தலைவர் அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரியத் தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்த போது ஆயிரக்கணக்கான வடகொரியப் பெண்கள் கதறி அழுதனர்.ஆனால் இது வெறும் நாடகம் எனச் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வடகொரியாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதும், நல்ல குழந்தைப் பருவ வளர்ச்சியைக் குழந்தைகளுக்கு வழங்குவதும் தலைவராகத் தனது கடமை என்று கிம் ஜாங் உன் கூறினார்.