மதுபானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

0
6

மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.

ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் வீதி போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here