“உண்மை” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.