இலங்கையின் 3 வயது சிறுவன் சோழன் உலக சாதனை!

0
6

கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் ஷஃபான் மற்றும் பாத்திமா இஃபாஸா ஆகியோரின் மகன் மொஹமட் ஷம்லான் என்ற மூன்று வயது சிறுவன் Peoples Helping Foundation மற்றும் Cholan World Record Book Institute இணைந்து நடத்திய உலகச் சாதனை நிகழ்வில் சாதனை படைத்துள்ளான்.

1098 புகைப்படங்களை அடையாளம் கண்டு பெயர் சூட்டுவதன் மூலம் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எண்கள், பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், காய்கறிகள், மனித உடலின் உள் உறுப்புகள், ஊர்வன, பூச்சிகள், மீன்கள், சிங்களம், ஆங்கிலம், அரபு மொழிகளின் எழுத்துக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள், உலகப் புகழ்பெற்ற கோபுரங்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள். தேசிய ஹீரோக்களின் படங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மனப்பாடம் செய்யும் திறனை இந்தப் பிள்ளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here