ஆப்கானிஸ்தானில் வாகன விபத்து – 8 பேர் பலி!

0
6

ஆப்கானிஸ்தானில் வீதி விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தின் கவாஜா டோகோ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் காரொன்றும் எரிபொருளை ஏற்றிவந்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இக்கோர விபத்தில் காரில் பயணித்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here