பாகிஸ்தானுக்கு கிடைத்த முதலாவது வெற்றி!

0
8

2024 T20உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணி கனடா அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் கிடைத்த முதலாவது வெற்றி இதுவாகும்.

கனடா அணிக்கெதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here