வண்ண வண்ண வெசாக் தோரணங்களால் அழகுற்ற குருக்கள்மடம் இராணுவ முகாம் வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர்களின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டுக்கான வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறந்த ஏற்பாடுகளுடன் நேற்றைய தினம் ஆரம்பமானது அதே வேளை இன்றைய தினமும் இக் கொண்டாட்டங்கள் தொடரவுள்ளது. இவ் வெசாச் வலயம் குருக்கள்மடம் இராணுவ முகாமினது பொறுப்பதிகாரி 11 சிங்க படை மேஜர் கமாண்டிங் அதிகாரி நிமால் பத்மசிறி அவர்களின் தலைமையில் இடம்பெறுவதுடன் வெசாக் வலயத்தினைக் கல்லடி இராணுவ முகாம் பிறிகேட் கமாண்டர் பிறிகேடியர் KMC குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார்.
இவ் வெசாக் வலயத்தைப் பார்வையிட வருவோருக்காக உணவு தன்சல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.