ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
கஞ்சா உபயோகத்தைச் சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்தச் சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.