டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) என்ற இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மல்லாவி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடுமையான டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.