ஆயுத விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது!

0
3

தெளிவான அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையைப் பிரிட்டன் நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரிட்டன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்தப் பிரிட்டன் முடிவு செய்துள்ளதாகப் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார்.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரிப் பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here