சர்வதேச அணி வேண்டாம் – ரிக்கி பொண்டிங்கின்!

0
8

இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர் தோல்விகளையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியிலிருந்து விலகியுள்ளமை இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அடுத்தத் தலைமை பயிற்சியாளரைத் தெரிவு செய்யும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, இயன் மோர்கன், ரிக்கி பொண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சர்வதேச அணிக்குப் பயிற்சியாளராக இருப்பதை விட ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராகத் தொடர விரும்புவதாக ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்குச் சர்வதேச அணிக்காகப் பயிற்சியாளராகச் செயல்படுவதற்கு உண்மையில் நேரம் இல்லை எனவும், ஒரு சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் எனில் அதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here