2025ஆம் வருடத்துக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை தினங்களைக் குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025ஆம் ஆண்டில் 26 அரச மற்றும் வங்கி விடுமுறை தினங்கள் இருப்பதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் இரு விடுமுறை தினங்கள், பெப்ரவரி மாதத்தில் மூன்று விடுமுறை தினங்கள், மார்ச் மாதத்தில் இரு விடுமுறை தினங்கள், ஏப்ரல் மாதத்தில் ஐந்து விடுமுறை தினங்கள், மே மாதத்தில் மூன்று விடுமுறை தினங்கள், ஜூன் மாதத்தில் இரு விடுமுறை தினங்கள், ஜூலை மாதத்தில் ஒரு விடுமுறை தினம், ஓகஸ்ட் மாதத்தில் ஒரு விடுமுறை தினம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செப்டெம்பர் மாதத்தில் இரு நாட்களும் ஒக்டோபர் மாதத்தில் இரு தினங்களும் நவம்பர் மாதத்தில் ஒரு நாளும் டிசம்பர் மாதத்தில் இரு தினங்களும் அரச மற்றும் வாங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.