லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் – நயன்தாரா ரசிகர்களிடம் வேண்டுகோள்

0
10

‘அன்னபூரணி’ படத்தின் புரோமோஷனுக்காக நயன்தாரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அவர் அதில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னாலே சிலர் திட்டுகிறார்கள். என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம். இன்னும் அந்த இடத்துக்கு நான் வரவில்லையா அல்லது நான் ஒரு பெண்ணாக இருப்பதால் இப்படி ஒரு பட்டம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் என்றால் 10 பேர் பெருமையாக பேசுகின்ற நேரத்தில், பலர் அதை விமர்சிக்கின்றார்கள். என் பயணம் அந்த பட்டத்தை நோக்கி கிடையாது. அந்த பட்டம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பு’ என்று அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here