உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனப் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளனர். அந்நாட்டின் விவசாயம் நலிவடைந்துள்ளதாகவும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டி குறித்த 2 பெண்களும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Soup திரவத்தை விசிறியதன் பின்னர், கலை முக்கியத்துவம் வாய்ந்ததா அல்லது ஆரோக்கியமான உணவிற்கான உரிமையா முக்கியமானது என ஓவியத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஓவியம் சுத்தம் செய்யப்பட்டதை அடுத்து பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.