மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை?

0
6

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளின் உண்மைகளைக் கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரத் தெரிவித்தார்.

எனினும் விசாரணைகளின் பின்னர் நியாயமான தீர்வு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here