சீரற்ற காலநிலை நிலை காரணமாகப் புத்தளம் – மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார். மாராவில – பிலாகமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் , நாத்தாண்டிய – உடுவல வீதியின் முட்டிபெதிவில பகுதியைச் சேர்ந்த யடவரகே தொன் ஹன்சி இஷாரா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, மாதம்பை குளியாபிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் மரமொன்று வீழ்ந்ததில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தும்லசூரிய – உடலவெல பகுதியைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி (வயது 38) என்பவரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாரவில மற்றும் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.