தொலைபேசிகளில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கம்!

0
4

விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்தச் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.

இருப்பினும், அவ்வப்போது பழைய கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து அதன் சேவையை நீக்கி வருகின்றது.

அந்த வகையில், WhatsApp நீக்கப்படும் 35 கையடக்கத் தொலைபேசிகளில் Galaxy Ace Plus, Galaxy Core,Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom ஆகியன அடங்குகின்றன. மேலும், குறித்த பட்டியலில் Xperia Z1, Xperia E3, Ascend P6, Ascend G525, C199, GX1s, Y625 ,Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7, I5, I6, i6S, i6S Plus உள்ளிட்டவையும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here