‘தளபதி 69’ – இரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

0
3

தளபதி விஜய் நடிக்கவுள்ள 69ஆவது படத்தின் அப்டேட் இன்று (13) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘கோட்’ படத்தினைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கவுள்ள இந்தப் படத்துக்குத் திகதிகளை ஒதுக்கி இருக்கிறார் நடிகர் விஜய்.

இதேவேளை ’தளபதி 69’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் தெரிவும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழுநேர அரசியலுக்குள் தளபதி விஜய் ஈடுபடவுள்ள நிலையில், இது அவரது இறுதி திரைப்படம் என்பதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here