ஜனாதிபதி ஐ.தே.கட்சியிலிருந்து விலக வேண்டும்!

0
5

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கியத் தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகரக் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். எமது கட்சி பொஹொட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்.”

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?

“… ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் பொஹட்டுவ சின்னத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரும் ஐக்கியத் தேசிய கட்சியில் இருந்து வெளியேறி பொஹட்டுவ உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம். அது நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம்.”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here